பள்ளிகள் திறப்புக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால் இறுதி முடிவை முதல்வர் அறிவிக்க உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று குழப்பம் நிலவியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது. இதன் இறுதி முடிவை முதல்வர் பழனிச்சாமி விரைவில் அறிவிக்க உள்ளார். எப்படியாயினும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.