Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: நாளை முதல் மீண்டும் -மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு…!!

நாளை முதல் யூடிஎஸ் செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் மீண்டும் யூடிஎஸ் செயலின் மூலம் சென்னை புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் வாங்கும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே யூடிஎஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட  நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த செயலின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 5% கேஷ்பேக்  போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |