தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதனை செய்தால் உடனே கைது செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அனைவரும் புத்தாண்டை நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை கூறியுள்ளது. அதன்படி கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபட்டாலும், மது போதையில் வாகனங்களை ஓட்டினால் உமடனே கைது செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மெரினா மற்றும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.