தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். அஸ்ஸாமில் முதல் கட்டமாக மார்ச் 27-ந் தேதி நடைபெறும். கேரளாவில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல்.
புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம். புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம். பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள். வாக்கு சாவடிகளில் முக கவசங்கள் வழங்கப்படும். தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.