Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு: 213 ஏரிகள் நிரம்பின ..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் வீசுகிறது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 213 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 213 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |