மியான்மரில் பொதுத்தேர்தல் முறைகேடு நடந்துள்ளதால் அவசரநிலை அமல் என ராணுவம் விளக்கியுள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் வைத்துள்ள நிலையில் ராணுவம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் மியான்மரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டிருக்கிறது.