Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

FlashNews: அடுத்த 2மணி நேரத்தில் – சற்றுமுன் வானிலை முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கின்றது. குறிப்பாக தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் மிதமான மழை பெய்யலாம். தேனி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்திற்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |