ஹிந்தியில் மிக பிரபலமான நடிகர் அமீர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு என்று ஹிந்தியில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹிந்தியில் மட்டுமில்லாமல் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று தற்போது மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.