கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுபடுத்த அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள்.
அதன்படி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் சுரங்க வேலை உட்பட பல பணிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது 2 வருடங்களுக்கு பின் மீண்டும் உகாண்டாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.