பார்சிலோனாவுக்கு விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் அக்வேரா திடீரென ஓய்வு அறிவித்துள்ளார். மெஸ்ஸியின் நெருங்கிய நண்பரான இவர் அண்மையில் நடந்த ஒரு ஆட்டத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து உடல்நலன் கருதி ஓய்வை அறிவித்துள்ளார்.
இதனால் இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் 420 கோல் அடித்துள்ள இவர் பிரீமியர் லீக்கில் அதிக ஹாட்ரிக் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.