விழுப்புரம் மாவட்டத்தில் தள்ளுவண்டி ஒன்றில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலமாக மீட்கப்பட்ட அந்த ஐந்து வயது குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது குழந்தை பட்டினியால் உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆனால் குழந்தைக்கு யாரும் உரிமை கூறாததால் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டினியால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.