தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி, 100-ஐ நெருங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 34,55,474 ஆகவும், 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 34,16,907 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.