Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சென்னையில் 3 நாட்கள்… போக்குவரத்தில் மாற்றம்… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சுதந்திர தின விழாவை ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சுதந்திர தின விழா போட்டி ஒத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் 75 வது சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகிற ஆகஸ்ட் 7, 9, 11ம் தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மூன்று நாட்களிலும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை நேரம் முடியும் வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையில் உள்ள காமராஜர் சிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதைத்தொடர்ந்து போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |