தமிழக சட்டப்பேரவையில் கடந்த மூன்று நாட்களாக துறைவாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை விற்க பொதுவான கைபேசி செயலி உருவாக்கப்படும். திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு புதிய தலைமை அலுவலகம் கட்டப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சுய உதவி குழு கடன் அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
FLASH NEWS: சுய உதவிக்குழு கடன் தொகை உயர்வு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!
