Categories
மாநில செய்திகள்

Flash News: இன்று காலை 9 மணிக்கு… தமிழகம் முழுவதும்…!!!

தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல்மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 9 மணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Categories

Tech |