அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்ட ஹாலோவீன் பண்டிகையின்போது அந்நாட்டை சேர்ந்த 1 வயது குழந்தை இங்கிலாந்து மகாராணியார் போல உடை உடுத்தியுள்ளது.
கெண்டக்கியில் jalayne என்ற 1 வயது குழந்தை ஒன்று வசித்து வருகிறது. இந்த குழந்தை அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடபட்ட ஹாலோவீன் பண்டிகையின்போது இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் போலவே உடை உடுத்தி வலம் வந்துள்ளது.
அவ்வாறு வலம் வந்த jalayne யை அனைவரும் தலைதாழ்த்தி மகாராணி வாழ்க என்று வாழ்த்தியுள்ளார்கள். இதுதொடர்பான புகைப்படத்தை அந்தக் குழந்தையின் தாயார் இங்கிலாந்திலுள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த புகைப்படங்களை கண்டு மகிழ்ச்சியடைந்த இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் jalayne யின் குடும்பத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, jalayne யின் புகைப்படம் தன்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்ததாக தெரிவித்துள்ளார்.