Categories
உலக செய்திகள்

FLASH: நான் பதவி விலகுகிறேன்…. கடுமையாக நிலவும் பொருளாதார நெருக்கடி…. எந்த நாட்டுலனு தெரியுமா?…!!

இலங்கையில் நிலவி வரும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிப்பதை முன்வைத்து வருகின்ற மே 1 ஆம் தேதியிலிருந்து தான் பதவி விலகுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங் தான் வருகின்ற மே 1ஆம் தேதியிலிருந்து பதவி விலகிக்கொள்வதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Categories

Tech |