Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: “தீபக் சஹாரை” இந்திய அணியிலிருந்து நீக்கிய “பிசிசிஐ”…. எதுக்குன்னு தெரியுமா…? இதோ வெளியான தகவல்….!!

இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட விருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா இலங்கை அணி பிப்ரவரி 24 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏனெனில் தீபக்கிற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்து வீசும்போது பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய 5 வாரங்கள் வரை ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அவரை பிசிசிஐ இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |