சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Categories
FLASH: கோர விபத்து…. 7 பேர் பலி….3 பேர் கவலைக்கிடம்….!!
