Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதான் காட்டு தீ மலரா…? பூத்து குலுங்கும் பூக்கள்… கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் காட்டு தீ மலர்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் ரசிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கோடை காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் முதுமலை வனத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் காட்டு தீ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை மலர்களை சற்று தூரத்தில் நின்று பார்க்கும் போது காட்டு தீ பரவியது போலவும், அருகில் நின்று பார்க்கும்போது கிளியின் மூக்கு போன்றும் தோற்றமளிக்கிறது.

இந்த மலர்களை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்க்கின்றனர். இதுகுறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இவ்வாறு செம்மஞ்சள் நிறத்தில் பூக்கும் இந்த காட்டு தீ மலர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் மாநில மலர் ஆகும் என தெரிவித்துள்ளனர். இவை தட்டையான விதைகள் உடையது எனவும், விதை, பட்டை, பிசின் போன்றவை மருத்துவத்திற்கு பயன்படுகிறது எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |