Categories
உலக செய்திகள்

“ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!”…. பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூரம்…. சோகம்….!!!!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாலைவன நகரமான பல்மைராவில் இருந்து ராணுவ வாகனத்தில் சென்றுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை வழியாக வாகனம் சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென ராக்கெட் குண்டை ராணுவ வாகனத்தின் மீது வீசியுள்ளனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் இந்த கோர சம்பவத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்தவொரு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

Categories

Tech |