ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடக்கு ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து பகுதியில் தான் (Queensland) தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து பண்டைய சமூகக் குடியேற்றமான லாக்ஹார்ட் (Lockhart) கடற்கரைக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 5 பயணிகளும் இறந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.