ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் எஸ்.யூ.வி ரக காரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அதில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தலிபான் அரசு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.