Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் நம்பக் கூடாத அழகுசார்ந்த ஐந்து கட்டுக்கதைகள்

மழைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அழகு சார்ந்த நடைமுறைகள் என சில கட்டுக்கதைகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம்

மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அழகு சார்ந்த நடைமுறைகள் என சில கட்டுக்கதைகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். எது உண்மை எது பொய் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கட்டுக்கதை: வெளியிலிருந்து வந்த பின்பு குளிக்கக் கூடாது.

உண்மை: எப்போது நீங்கள் வெளியில் சென்றாலும் உங்களின் மேல் தூசி, அழுக்கு,மற்றும் பாக்டீரியாக்கள் சேரும்.இது மழைகாலத்தில் இன்னும் அதிகமாகிறது. மழைநீர் மூலம், அழுக்கு உடலில் உட்புகுந்து, பெரும்பாலும் தோல் நோய்த்தாக்கங்கள் நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதில் இருந்து பாதுகாக்க வெளியில் சென்று உள்ளே வரும் போழுது ஆன்டி பாக்டிரியல் சொல்யுஷன் கொண்டு உடம்பை சுத்தம் செய்யுங்கள்.

கட்டுக்கதை: மழைக் காலத்தில் மேக் கப் செய்துக் கொள்ள அவசியமில்லை.

உண்மை: எதுவாகயிருந்தாலும் இந்தக் காலத்தில் மேக் கப்பை தவிர்ப்பதற்கு எந்த காரணங்களும் இல்லை. இருப்பினும் சரியான மேக்கப்பை போடுவது முக்கியம். ஈரப்பதம் உங்கள் சருமத்தில் பருக்கள் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். அதனால் இலகுவானப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் இது உங்களுக்கு பாதிப்பை உருவாக்காது.

கட்டுக்கதை: ஈரமானக் கூந்தல் உங்களுக்கு சளியை ஏற்படுத்தும்.

உண்மை: நீங்கள் திடீர் மழையில் மாட்டிக் கொண்டால் உங்கள் பாட்டி எப்போதும் சளிக்கான எச்சரிக்கையை கொடுப்பார். ஆனால் சளி அந்த வழியில் வேலை செய்வதில்லை.பொதுவான இருமல் மற்றும் சளி வைரஸ் தாக்குதலால் வருகிறது. நீங்கள் ஈரக் கூந்தலுடன் சுற்றுவதால் வருவதில்லை.இருப்பினும், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடையர்களை இது எளிதில் பாதிக்கும். ஈரத்தலையுடன் சுற்றுவது பொதுவாகவே நன்மையற்றது ஆகையால் கூந்தலை உலர்த்துவது முக்கியமானது.

கட்டுக்கதை: நீங்கள் மழைக்காலத்தில் மாய்ஸ்ட்ரைசரை தவிர்க்க வேண்டும்.

உண்மை: இந்த பொதுவானக் கட்டுக்கதை. ஏனென்றால் பெரும்பாலான தோல் வகைகள் மழைக்காலத்தில் எண்ணெய் பசையை கொண்டிருக்கும். உங்கள் சருமத்திற்கு இன்னும் அதிக மாய்ஸ்ட்ரைசர் மழைக்காலத்தில் தேவைப்படுகிறது. இது உங்களின் சருமத்தை சரிசெய்ய மாய்ஸ்ட்ரைசர் முக்கியமானது.

கட்டுக்கதை: மழைக் காலத்தில் வாட்டர் ரெசிஸ்டன்ட் மேக்கப் போதுமானது.

உண்மை: மழைக்காலத்திற்கான மேக்கப் பொருட்களை வாங்கச் செல்கிறீர்கள் என்றால் விற்பனையாளர் வாட்டர் ரெசிஸ்டன்ட் மேக்கப் பொருட்களை வாங்குவதற்கு உங்களை நம்பவைப்பார்கள்,சிந்தியுங்கள். வாட்டர் ரெசிஸ்டன்ட் பொருட்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையைக் கூட களையச் செய்துவிடுகிறது. நீங்கள் ஒருவேலை கொட்டுகின்ற மழையில் மாட்டி கொண்டால் ,கற்பனை மட்டும் தான் செய்து பார்க்க முடியும். வாட்டர் ப்ரூஃப் மேக் கப் இந்த பருவத்தில் நீரை தாங்கக்கூடியதாக இருக்கும்.

Categories

Tech |