Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… வரவேற்பு அளித்த மக்கள்… நிறைவேற்றிய தி.மு.க தலைவர்…!!

சேலம் மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு  மற்றும் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க ஆட்சி அமைத்த உடன் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார்.

மேலும் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் அறிவித்துள்ளார். இந்த மாதமே முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை பெண்கள் அனைவரும் வரவேற்கிறோம். அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |