Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அங்க போனா ஆபத்துன்னு சொல்லிருகாங்க… காற்று ரொம்ப பலமா வீசுது… அதான் டோக்கன் கொடுக்கல… ஏமாற்றத்தில் மீனவர்கள்…!!

கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் டோக்கன் வழங்க வழங்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மீன்பிடி டோக்கன்  வழங்கப்படவில்லை என மீன்பிடி துறைமுக அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போகவில்லை.

Categories

Tech |