Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கேரளாவில் இதற்கான மழை பெய்து வருகின்றது. அதன் காரணமாக சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி இது மட்டுமில்லாமல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி இருக்கக் கூடிய பகுதியில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |