முன்விரோதம் காரணமாக மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மீனவரான குப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரகு, துரை ராஜ், மோகன் ஆகியோருக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். அப்போது குப்பனின் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்ததில் குப்பனின் வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த சமயத்தில் சிகிச்சை பலனின்றி குப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரகு, மோகன் மற்றும் துரைராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.