அமெரிக்காவில் மனிதர்களைப் போலவே பற்கள் உடைய மீன் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மீனின் பற்கள், மனிதர்களின் பற்கள் போன்றே இருந்துள்ளது. எனவே அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
இந்த மீன், ஷிப்ஷீட் வகையை சேர்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த மீனின் பற்கள் கடினமாக இருக்கக்கூடிய இறையை மென்று உண்பதற்கு பயன்படுகிறதாம். தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.