Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசைவ பிரியர்களுக்காக காரசாரமான “இறால் மீன் குழம்பு”

தேவையான பொருட்கள் 

  • இறால்                  – அரை கிலோ
  • உள்ளி                   – கால் கிலோ
  • தேங்காய்            – அரை மூடி
  • வத்தல்                 – 10
  • எண்ணெய்         – தேவைக்கேற்ப
  • உப்பு                      – தேவையான அளவு
  • சீரகம்                    – 6 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி   – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் இறால் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

உள்ளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சீரகம், வத்தல்  மற்றும் தேங்காய் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள உள்ளியை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வருகையில் அரைத்த தேங்காவை போட்டு உப்பு மற்றும் மஞ்சள் பொடி தேவையான அளவு சேர்க்க வேண்டும்.

மேலும் வதக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள இறால் மீனை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும் மீன் நன்றாக வெந்ததும் குழம்பு கெட்டியாகி விடும்.

உடனடியாக இறக்கிவிடவும்.

இப்பொழுது சுவை மிக்க காரசாரமான இறால் மீன் குழம்பு தயார்.

Categories

Tech |