விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு கண்ணு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து ரச்சிதா எந்த டீமியில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார்.
ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு விதமான ஃபீலிங் வர ரச்சிதாவோ அவரை அண்ணன் என்று கூறிவிட்டார். இருப்பினும் மாஸ்டர் அடங்குவது போன்று தெரியவில்லை. இந்த அண்ணனுக்கு வந்து ஒரு முத்தம் கொடு என்று ரச்சிதாவிடம் மாஸ்டர் கேட்க பார்வையாளர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டரிடம் உங்கள் மீது எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை என ரச்சிதா தெளிவாக கூறியபோதும் கொஞ்சம் என்னை பிடித்த மாதிரி நடித்து அட்ஜஸ்ட் பண்ணுங்கள் என்று மாஸ்டர் வற்புறுத்துகிறார்.
ஆனால் ரச்சிதா அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு நான் நடிப்பதற்காக வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் புடிச்சவங்க வந்து பேசும்போது அட்லீஸ்ட் ஹாய் ஹலோ என்ற வார்த்தை களையாவது சொல்லலாம் என்று மாஸ்டர் கூற, அதுவும் தப்பு என்று ரச்சிதா கூறிவிட்டார். மாஸ்டரின் வேலையால் அவர் மீது பார்வையாளர்கள் செமக் கடுப்பில் இருப்பதோடு பிக் பாஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.