Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார்.

விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயலியை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகள் கோரிக்கைகள் ஆகியவற்றை தெரிவிக்க முடியும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இது போன்ற செயலியை வடிவமைத்து கொடுக்க தயாராக இருப்பதாக விழுப்புரம் ஜிஎல்யு  நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரியான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |