அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அவர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார்.
அதிமுகவின் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக உடைய தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வருகை தந்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விதமான பிரச்சனைகள் அதிமுகவில் தொடர்ந்தது.
மிக முக்கியமாக இரண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்குகளை மாறிமாறி தாக்கல் செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பொதுக்குழு நடைபெற்றது செல்லும், அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடரலாம் என்ற ஒரு தீர்ப்பினை வழங்கியிருந்தது. இந்த நிலையில் தான் தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க பிறகு முதல் முறையாக வருந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தற்போது அதிமுகவின் தலைமை அலுவகலகத்தில் குவிந்திருக்கிறார்கள். அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்ற ஒரு கடிதமும் ஓபிஎஸ் ஆதாரவாளரான புகழேந்தி டிஜிபியிடம் கொடுத்திருந்தார். இப்படியான பரபரப்பான நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது தலைமை அலுவலகம் வந்துள்ளார். 72நாட்களுக்கு பிறகு எடப்பாடி தலைமை அலுவலகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.