Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்ல அங்க பேசி, அப்புறம் இங்க பேசி”…. எப்படியோ சந்திரமுகி 2 படத்தை தொடங்கிட்டேன்….. நடிகர் வடிவேலு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 படம் குறித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது பார்ட் 2 எடுக்கப்படுகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பி. வாசு இயக்குகிறார்.

இதனையடுத்து நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 படத்தை இயக்குவதற்கு நான் தான் பி. வாசு மற்றும் லைகா நிறுவனத்திடம் பேசி சம்மதிக்க வைத்தேன். நான் லைகா நிறுவனத்திடம் பேசிய போது அவர்கள் பி. வாசுவிடம் கதை கேட்க என்னை அனுப்பினார்கள். அவர் என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்ன பிறகு நான் லைகா நிறுவனத்திடம் பேசினேன். அங்கு பேசிவிட்டு மீண்டும் பி.வாசுவிடம் பேசினேன் என்று கூறியுள்ளார். மேலும் இப்படி மாறி மாறி பேசி தான் சந்திரமுகி 2 படத்தை வடிவேலு தொடங்கி வைத்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |