Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி… 3 விக்கெட்… அசத்திய நடராஜன்…. வைரலாகும் வீடியோ..!!

அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன் இன்று டீ-20யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்களை அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவின் 150 ரன்களில் கட்டுப்படுத்த சாஹல், நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிய நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நேற்றைய டி20 அறிமுக போட்டியிடும் மூன்று விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆக்கி வெளியேற்றினார். மேலும் ஆர்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கோலி கூறுகையில் ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் இன்னும் சற்று மயக்கமாக இருக்கிறது.

கன்கசன் மாற்று வீரர் என்பது வித்தியாசமான ஒன்று. இன்று அது எங்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த முறை இது போன்ற வாய்ப்பு சாஹல்க்கு கிடைக்காது.சாஹல் களமிறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது. நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். நடராஜனை பார்த்தால் அவரால் மிகப் பெரிய அளவில் மேம்பட முடியும் என்று தோன்றுகிறது. ஹர்திக் பாண்டியா கேட்ச் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Categories

Tech |