Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளி திறப்பு – மாநில அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்ததால் இணையம் வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய சூழலில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடு குறித்து எந்த அறிவிப்பையும் மத்திய – மாநில அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆங்காங்கே சில மாநிலங்கள் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரகாண்டில் வரும் நவம்பர் 2ம் தேதி பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |