Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் பிரக்னன்சி கிட், இப்போ கர்ப்பம்”….. நித்யா மேனனுக்கு என்னதான் ஆச்சு….. போட்டாவால் குழம்பிப்போன ரசிகர்கள்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.சமீபத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரக்னன்சி கிட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி இருந்தார்.

இந்நிலையில் தற்போது  கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நித்யா மேனன் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகாமல் கர்ப்பமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் சிலர் நித்யா மேனன் புது பட புரமோஷனுக்காக இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருப்பார் என்று கூறுகிறார்கள். மேலும் அந்த புதிய படத்தில் நித்யா மேனன் கர்ப்பிணியாக நடித்து வருவதால் அந்த புகைப்படத்தை தான் தற்போது பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |