வியட்நாம் நாட்டில் முதல் தடவையாக ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
கடந்த 19 ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி, அவரின் மாதிரிகளை மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த முடிவுகளில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.