Categories
உலக செய்திகள்

முதல் ஓமிக்ரான் பாதிப்பை உறுதி செய்த மற்றொரு நாடு… வெளியான தகவல்…!!

ஜப்பான் நாட்டில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதிப்பு ஒரு சுற்றுலா பயணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கு சமீபத்தில் நமீபியாவிலிருந்து ஒரு சுற்றுலா பயணி வந்திருக்கிறார். அவருக்கு ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளதாவது, ஜப்பான் நாட்டிற்கு வந்த அந்த சுற்றுலா பயணிக்கு, நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து ஜப்பான் அரசு, ஏற்கனவே தென்னாபிரிக்க நாடுகளுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தது.

மேலும், நேற்று, பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை அறிவித்தது. அந்த உத்தரவு, இன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா கூறியிருந்தார். இந்நிலையில் அந்நாட்டில் இன்று ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |