எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. தங்கம் கைப்பற்றப்படவில்லை.எனக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதாக சூலூரில் முதல்வர் பேசியது வடிகட்டிய பொய் என்றும், சூலூர் பரப்புரையில் எதுவும் தெரியாத சாதாரண மனிதன் போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது கேளிக்கையாக இருக்கிறது என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.