Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் முதல்வரின் தந்தை – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ..!!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையான ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது 89 ஆகிறது.கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது. இதனால் அவருக்கு நேற்று டயாலிசிஸ் செய்யப்பட்டது.

மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது முதிர்வு காரணமாக அவரின் உடல்நிலை நாளுக்கு நாள்  மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2018 ஆண்டும் இவர் சிறுநீரக பிரச்னை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துத்துவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |