Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படகுகளில் பட்டாசு வெடிப்பு… வலைதளங்களில் வைரலான வீடியோ… விசாரணைக்கு உத்தரவிட்ட சப்-கலெக்டர்…!!

படகு சவாரியின் போது பட்டாசு வெடித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விருப்பமான இடம் என்றால் படகு சவாரி மட்டும்தான். இங்கு நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மணமக்களை அழைத்துச் செல்வதற்காக சுற்றுலா வளர்ச்சி கழக படகை அவர்கள் வாடகைக்கு எடுத்து அதில் அலங்காரம் செய்துள்ளனர். அதன்பின் மணமக்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் அனைவரும் படகுகளில் சவாரி செய்த போது வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகளை ஏரியில் வைத்து வெடித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் சார்பில்  சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகாரில் “படகுகளில் இதுபோன்ற தேவையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துக் செல்வதினால் பெரும் ஆபத்து நேரிடும். இதற்காக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுவே தொடர் கதையாகி விடும்” என கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகர் டிஎஸ்பி மற்றும் நகராட்சி ஆணையரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |