குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் வாபி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு சிகை அலங்காரம் செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஃபயர் ஹேர் கட் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவி ஃபயர் ஹேர் கட் செய்துள்ளனர். அந்த வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவியதால் திடீரென தீ உடல் முழுவதும் பரவி வாலிபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த வாலிபரை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்களின் மத்தியில் சமீப காலமாகவே ஃபயர் ஹேர் கட் முறை ஃபேமஸான நிலையில், திடீரென வாலிபர் மீது தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.