தைவான் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறார்கள்.
தைவானில் 13 மாடி கொண்ட குடியிருப்பில் ஒரு பெண்ணின் ஞாபக மறதியால் தீவிபத்து உண்டானதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறியிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று காஹ்சியுங் என்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் 40 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் தைவான் நாட்டில் நடந்த மிகக் கொடிய தீவிபத்தில் இதுவும் ஒன்று என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்திற்கு காரணமாக இருந்த அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அதாவது அந்த பெண், தான் பூஜைக்காக போட்ட தூபத்தை அணைக்க மறந்துவிட்டார். இதுவே, இக்கோர விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.