திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே சொசைட்டி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணமக்கள் வீட்டார் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது வெடியிலிருந்து வந்த தீப்பொறி மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த துணி பந்தல் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.