ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரான் ஆகும். இங்கு சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அரசு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு கைதிகளும் அடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிறை கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது துணிக்கிடங்கில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென சிறைச்சாலை முழுவதும் பரவியது. இந்த தீயினால் ஏற்பட்ட கரும்புபுகை அப்பகுதிகளைச் சூழ்ந்து உள்ளது. இந்த சம்பவத்தால் சிறைச்சாலையில் பெரும் பதற்றம் உருவானது.
இதனைஅடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மிகவும் கஷ்டப்பட்டு தீயை அனைத்துள்ளனர். இருப்பினும் இந்தத் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த அறுபதுக்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சிறைச்சாலையில் தீப்பற்றி எரிவதை அறிந்து கொண்ட அப்பகுதி மக்கள் சிறைக்கு வெளியே திரண்டனர். மேலும் அவர்கள் சிறைக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக கூறி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தினர்.