மாட்டுக் கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பாலசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருக்கிறார். நாகராஜ் அவரது வீட்டின் அருகே கொட்டகை ஒன்றை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
மேலும் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கொட்டகையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சேதம் ஆகியது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.