Categories
தேசிய செய்திகள்

குப்பையில் வீசப்பட்ட துணி… மளமளவென பற்றிய தீ… தீயில் நாசமான 20 குடிசைகள்…!!

நேற்று அதிகாலை டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளது.

டெல்லி மாநிலத்தில் தென்கிழக்கு பகுதியில் ஒக்ஹலா சஞ்சய் காலனியில் குடிசை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றார்கள். மேலும் இதன் அருகில் துணி குடோன்களும் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிசைப்பகுதியில் திடீரென்று தீ பிடித்து மளமளவென குடிசை வீடுகளுக்குப் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் 30 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சிக்கிய பொதுமக்களை அவர்கள் பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளனர். இந்த தீ கடும் போராட்டத்திற்கு பிறகு  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது குப்பையில் வீசப்பட்ட ஒரு துணியால் இந்த தீ பரவியுள்ளது என்றும் 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து விட்டதாகவும் ஒரு லாரியும் தீப்பிடித்து எரிந்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தீ பிடித்தபோது குடிசைகளில் மாட்டிக்கொண்டு 40 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் முதியவர் ஒருவர் காணவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |