அதிமுகவின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையை கடந்த மாதம் பதினோராம் தேதி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று, தலைமை அலுவலகத்தினுடைய பிரதான வாயில் கதவை உடைத்து, அங்கு இருக்கக்கூடிய கட்சியினுடைய பத்திரங்கள், பணம், முக்கிய ஆவணங்கள், பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றது தொடர்பாக அதிமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும்,
முன்னாள் அமைச்சர்ருமான சிவி சண்முகம் குறிப்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 23ஆம் தேதி கடந்த மாதம் அளித்த புகாரியின் அடிப்படையில் சுமார் 7 பிரிவுகளின் கீழ்ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களாக இருக்க கூடிய வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.சி பிரபாகரன், புகழேந்தி என 300 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் எதிரியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார்.