தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, அது நிறைவடைந்த போதிலும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுவதாகவும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனக்கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும் இந்த அபராத தொகையான 5 லட்சம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றம் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.